ராஜித, வெல்கம, துமிந்த ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்க ரணில் முடிவு!
அமைச்சரவையில் மேலும் மூவரை விரைவில் அமைச்சர்களாக இணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அரசியல் தகவல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என்று குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவிப் பிரமாணம்
இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார் வெல்கம போக்குவரத்து அமைச்சராகவும், ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராகவும் எதிர்வரும் நாட்களில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளத் தயாராகவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க மின்சக்தி அமைச்சராகப்
பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்றும் குறித்த
தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
