பெட்ரோலிய தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் ஆலோசனை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சகல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.
பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் சகல தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன

எதிர்காலத்தில், எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனை சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் இயங்கும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களை இலங்கை சந்தைக்குள் நுழைய அனுமதித்து, திறமையான மற்றும் தொடர்ச்சியான சேவையை பேணுவதற்கு தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் கையாளும் முறையை ஏற்படுத்துவதன் மூலம் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல் தொடர்பான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், சுத்திகரிப்பு நடவடிக்கைகள், புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படுதல், நிதி மற்றும் மனிதவள தணிக்கை மூலம் மேலாண்மை, ஏற்கனவே உள்ள கூட்டு ஒப்பந்தத்தை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக செயல்திறனின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு முறையை அறிமுகப்படுத்துவது பற்றியும் அதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 13 மணி நேரம் முன்
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam