முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! இறுதி முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா போன்ற விடயங்கள் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்
நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன்,அவரது மெய்பாதுகாவலர், மனைவி, மகன் உள்ளிட்ட நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

அத்துடன் துப்பாக்கிரப்பிரயோகத்தின் மூலம் அவர் உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதிவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர் உயிரிழந்த இடத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரே இறுதியான முடிவினை கூறமுடியும் என்றும் விளக்கமளித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan