கோவிட் தொற்றுக்காக பாலாபிஷேகம் செய்த சுகாதார அமைச்சர்
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று முன்தினம் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துக்கொண்டுள்ளார்.
வெள்ளவத்தை மயூராபதி பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இந்த பூஜை வழிபாடுகளில் அவரது கணவர் காஞ்சன ஜயரத்னவும் கலந்துக்கொண்டுள்ளார்.அம்பாளுக்கு பாலபிஷேகம் செய்து இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆசி வேண்டி இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதற்கு முன்னர் மருத்துவர் எலியந்த வைட்டின் ஆலோசனைக்கு அமைய விஸ்வ சக்தியால் உயிரூட்டப்பட்ட தண்ணீர் கலசத்தை ஆறுகளில் விடும் வேலைத் திட்டத்தையும் முன்னெடுத்திருந்தார்.
மூன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் அரச மருத்துவர் என அடையாளப்படுத்தப்பட்ட எலியந்த வைட் மந்திரித்து கொடுத்த கலசங்களை ஆறுகளில் போட்ட காணொளிகள் பரப்பரப்பாக பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
