ஒரே இரவில் குடும்பங்களுடன் கொன்றொழிக்க சதித்திட்டம்!நேர்காணலில் அம்பலமான பகீர்த் தகவல்-செய்திகளின் தொகுப்பு
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே இரவில் அவர்களது குடும்பங்களுடன் கொலை செய்வதற்கு சதித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாக பகீர்த்தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் ஜே.வி.பியினர் இருந்தார்கள் என குற்றச்சாட்டு ஒன்றை, மொட்டுக்கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த தற்போது முன்வைத்துள்ளார்.
தெற்கு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ ஹோம் போன்று நாடு முழுவதும் 120 போராட்டக் களங்களை அமைத்து, பொதுஜன பெரமுனவின் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களின் குடும்பங்களுடன் ஒரே இரவில் கொல்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,




