மாற்றங்களை ஏற்றுக் கொண்டால் வளமான நாடு உருவாகும்! அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
இலங்கையில் உள்ள பொதுமக்கள் மற்றவர்கள் மாற விரும்புவது தவிர, எவரும் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்று அமைச்சர் சமந்த வித்தியாரத்ன குறிப்பட்டுள்ளார்.
மாற்றங்களை உருவாக்கல்
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் பிரஜைகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் நம்மவர்களில் எவரும் தங்களை மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை.
மற்றவர்கள் மட்டும் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அந்த நிலைமை மாறி, அனைவரும் நெகிழ்வுப் போக்குடன் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள முனைந்தால் இந்த நாடு வளம் பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |