கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை (Ampara ) மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அம்பாறையின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர பகுதிகளில் உள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "சேனாநாயக்கபுர பகுதியில் கல்லோயா ஆற்றின் கரைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மணல் மூட்டைகளை போட்டு தற்காலிகமாக சரிசெய்ய வழி இல்லை.
வெள்ள அபாயம்
தற்போது, உடைப்பு ஏற்படும் அபாயம் மட்டுமே உள்ளது. உடைப்பெடுக்கவில்லை. ஆனால் அது உடைந்தால் அம்பாறை பிரதேச செயலாளர் பிரிவின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர கிராம அலுவலர் பிரிவுகளின் சுதுவெல்ல பகுதியில் வசிக்கும் ஏராளமான குடும்பங்கள் வெள்ள சூழ்நிலையால் பாதிக்கப்படலாம்.

எனவே, இன்று மாலை இந்தப் பகுதியில் ஒரு முகாமை அமைத்து, சுமார் 40 குடும்பங்கள் அங்கே தங்க ஏற்பாடு செய்தோம். அங்கே சுமார் 110 பேர் இருக்கிறார்கள்." என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam