கிரிக்கெட் வீரர் தனுஷ்கவின் செயலால் அவுஸ்திரேலியாவிடம் மன்னிப்பு கோரியுள்ள அமைச்சர் ரொஷான்
20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியா சென்ற இலங்கை அணியின் தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டு அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
Irresponsible individual act !
— Roshan Ranasinghe (@R_A_Ranasinghe) November 9, 2022
As the minister in charge of the subject of sports I wish to tender my apology to the concern party in Australia, the Australian government , the people of Australia and the @ICC , of the irresponsible individual act of @danushka_70 .
இந்த சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தும் அவுஸ்திரேலிய தரப்பு, அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் அவுஸ்திரேலிய மக்களிடம் மாத்திரமல்லாது சர்வதேச கிரிக்கெட் பேரவையிடமும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் மன்னிப்பு கோருகிறேன்.
தனுஷ்க குணதிலக்கவின் செயல் தனி நபரது பொறுப்பற்ற செயல். இது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.
நாடு என்ற வகையில் அதற்கான பொறுப்பை ஏற்கின்றோம். இந்த விடயம் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.