கிளிநொச்சியின் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு - நீர் வழங்கல் அமைச்சர்
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய் வழி நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
குடிநீர் தேவை
அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்கால பொருளாதார நலன்கருதி குறிப்பாக பரந்தன் பகுதியில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வயத்தின் தேவை கருதியும், பொது மக்களுக்கான குடிநீர் தேவை அதிகரித்து செல்லும் நிலமையினையும் அதாவது முக்கியமாக கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் அதிகரித்து வரும் சிறுநீரக பாதிப்புக்களை கருத்தில் எடுத்தும் கிளிநொச்சி மாவட்ட நீர் விநியோகத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri