தொன்மை வாய்ந்த சுற்றுலா தளங்களை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் (VIDEO)
மன்னார் மாவட்டத்தின் தொன்மை வாய்ந்த சுற்றுலா தலங்களாக காணப்படும் புராதன சின்னங்களை கொண்ட இடங்களை பார்வையிடும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இன்றைய தினம் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மன்னார் மாவட்டத்தில் மன்னார் , முசலி மற்றும் மடு பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள தொன்மை வாய்ந்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு நடவடிக்கைகளையும் நேரில் அவதானித்ததுடன் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கிலும், மன்னார் மாவட்ட பகுதியில் புராதன தேசிய மரபுரிமைகள் மற்றும் புராதன சின்னங்களை பார்வையிடும் வருகையாக குறித்த விஜயம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
