மாணவர்களின் எண்ணிக்கையில் கடும் பாரிய வீழ்ச்சி: கல்வி அமைச்சர் தகவல்
நாட்டில் 4 வயது பூர்த்தியான குழந்தைகளில் 30% வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி மிகவும் முக்கியமானது, உலகில் இது குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கல்வித்துறையில் சீர்திருத்தங்கள்
நாட்டில் சுமார் 6000 முன்பள்ளி டிப்ளோமாதாரிகள் இருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு முதல் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால்,
முதலாம் தரத்திற்குச் செல்லும் குழந்தைகளின் முன் குழந்தைப் பருவ வளர்ச்சியையும் அதற்கு
ஏற்ற வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வின் போது பயிற்சியற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்காக நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri