முட்டை இறக்குமதியில் ஊழல்: அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் என்கிறார் நளின் பெர்னாண்டோ
இந்திய முட்டை இறக்குமதியில் ஊழல் நடைபெறுவது நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், முட்டை இறக்குமதியில் இலஞ்ச கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தி இருந்தார்.
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் போது இலஞ்சம் பெறுவதாக ஆதாரம் இருந்தால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டும்.
அது உறுதி செய்யப்பட்டால் அமைச்சர் பதவியை துறப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |