கால்நடை வைத்தியர்களை சந்தித்த இராஜாங்க அமைச்சர்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கால்நடை கால்நடை வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பயிற்சி நிலையத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று 18.02.2022 இடம்பெற்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது, இன் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் எதிர்பார்ப்பு நாட்டில் பால் மற்றும் முட்டையில் தன்னிறைவு காண வேண்டும் என்பது அதேபோன்று நிதியமைச்சர் பால் உற்பத்தி தன்னிறைவு காண வேண்டும் என்பதற்காக 1000மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு அரச அதிபர்கள் கால்நடை உற்பத்தி
சுகாதார திணைக்களங்களின் பணிப்பாளர்கள், கால்நடை வைத்தியர்கள், உட்பட பலர்
கலந்து கொண்டனர்.



