விரைவில் பதவி விலகவுள்ள அமைச்சர் குமார ஜயகொடி
எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது அமைச்சர் பதவியில் இருந்து விரைவில் விலக தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கின் தீர்ப்பு
கடந்த நல்லாட்சிக் காலத்தில் இடம்பெற்ற பசளை டெண்டர் மோசடியொன்று தொடர்பில் அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கான ஆணைக்குழு வழக்கொன்றைப் பதியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டால் உடனடியாக அமைச்சுப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக அமைச்சர் குமார ஜயகொடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், வழக்கொன்றைப் பதிவு செய்த உடன் பதவியில் இருந்து விலகுவது மோசமான முன்னுதாரணமாகி விடும் என்பதால் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை பொறுமையுடன் இருக்குமாறு ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri