ஜனாதிபதி கோட்டபாயவின் செயற்பாட்டால் கடும் அதிருப்தியில் அமைச்சர் - தீவிரமாகும் உள்ளக மோதல்
சமகால அரசாங்கத்திற்குள் உள்ளக மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு அதிகளவான அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தனது அமைச்சின் கீழ் மீதமாக உள்ள ஒரே நிறுவனத்தையும் நாமல் ராஜபக்ஷவுக்கே வழங்குங்கள் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அனுப்பி கடிதத்தின் பிரதிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைக்க அஜித் நிவாட் கப்ரால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இறுதியாக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை திருத்தத்தின் போத நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலிடம் இருந்த நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் பல நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தியடைந்த அஜித் நிவாட் கப்ரால் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அதற்கமைய அஜித் நிவாட் கப்ராலிடம் மீதமான ஒரே ஒரு நிறுவனம் மாத்திரமே உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri