அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட முன்னாயத்த அபிவிருத்திக் கலந்துரையாடல் (photos)
யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்த கலந்துரையாடலொன்று கடற்தொழில் அமைச்சரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று (02.03.2023) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படையினர், திணைக்களங்கத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலில் கச்சதீவு அந்தோனியார் தேவாலய உற்சவத்திற்கான ஏற்பாடுகள்
மற்றும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது.
மேலதிக செய்தி: தீபன்








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
