மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்:அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

Jaffna Douglas Devananda Northern Province of Sri Lanka
By K. S. Raj Oct 26, 2023 01:42 PM GMT
Report

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படுத்தக் கூடாது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(26.10.2023) நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீவகப் பிரதேசங்களுக்கான போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடப்பட்ட  போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பெல் அடித்து சட்டவிரோத மதுபானம் விற்பனை: கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

பெல் அடித்து சட்டவிரோத மதுபானம் விற்பனை: கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

பயணிகள் படகு சேவை

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அதிகாரிகள், நயினாதீவிற்கும் குறிகட்டுவானுக்கும் இடையிலான போக்குவரத்தில் ஈடுபடுகின்ற  தனியார் பயணிகள் படகு குறிகட்டுவான் இறங்கு துறையில் நீண்ட நேரம் தரித்து நிற்பதால், நெடுந்தீவிற்கான பயணிகள் படகு சேவையை சீரான முறையில் உரிய நேரத்திற்கு முன்னெடுக்க முடிவதில்லை எனவும், இதனால் அரச உத்தியோகஸ்தர்களும் பயணிகளும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்:அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் | Minister Douglas Appeals To The Authorities

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி, நெடுந்தீவு மக்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற அசௌகரியங்களை களையுமாறு அமைச்சர்  அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றைய கூட்டத்தில், மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களகங்களின் அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.   

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்: அமைச்சர் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்: அமைச்சர் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

மன்னாரில் கடல்சார் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகம் திறந்து வைப்பு (Photos)

மன்னாரில் கடல்சார் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகம் திறந்து வைப்பு (Photos)

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ்

இதேவேளை காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார்.

குறித்த ஜனாதிபதி மாளிகையானது தனியார் பல்கலைக் கழகத்திற்கு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுவதற்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துள்ளதாக ஊடகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இன்று காலை இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்:அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் | Minister Douglas Appeals To The Authorities

அதாவது, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரியினால், தொழில்நுட்ப பூங்கா உட்பட 8 அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணி உட்பட அடையாளப்படுத்தப்படட காணிகளை வழங்குமாறு இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள், ஏற்கனவே தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளில் முறையான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை, தற்போது தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்:அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் | Minister Douglas Appeals To The Authorities

குறித்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளமையினால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு நஸ்டஈடுகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், புதிய திட்டங்களுக்கான அனுமதிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மாளிகையை தனியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்குவது தொடர்பில் தீர்மானகரமான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கபடவில்லை என்றே தான் நம்புவதாகவும், குறித்த மாளிககை்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்:அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் | Minister Douglas Appeals To The Authorities

மேலும், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தலைமையிலான குழுவொன்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US