மன்னாரில் கடல்சார் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகம் திறந்து வைப்பு (Photos)
மன்னார் மாவட்டத்தில் கடல் பகுதிகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல், மனித வியாபரம், மற்றும் கடல்சார் குற்றங்களை கட்டுபடுத்துவதற்காக மன்னார் மாவட்டத்தில் நிறுவப்பட்ட புதிய அலுவலகம் இன்று(26)அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பொலிஸாரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலந்துரையாடல்
குறித்த நிகழ்வில் பின்னர் மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி இடம் பெறும் ஆட்கடத்தல் மற்றும் மனித வியாபாரம் உட்பட பல்வேறு கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
நிகழ்வின் இறுதியில் விருந்தினர்களால் மன்னார் மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்படதுடன் நிகழ்வின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அவுஸ்திரேலியாவின் பொலிஸ் அதிகாரி ரொபேர்ட் வின்சன், குற்றப்புலனாய்வு பிரிவு டி.ஐ.ஜீ. பிரசாத் ரனசிங்க வன்னி பிராந்திய டி.ஐ.ஜீ.விஜயசேகர ஆட்கடத்தல், மனிதவியாபாரம் மற்றும் கடல்சார் குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர், தடுப்பு பிரிவு பணிப்பாளர் , மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால ,அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.



சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
