மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Sri Lankan Tamils Douglas Devananda Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kajinthan Jul 28, 2023 08:35 PM GMT
Report

கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (28.07.2023) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்றும் ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா | Minister Douglas About Human Remains Tamil Areas

கிராம மட்ட விழிப்பு குழு

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.என். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் சுகாதாரம், கல்வி, விவசாயம், சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிராம மட்டத்திலான விழிப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் பயன்பாடு உட்பட்ட சமூக விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்பது சிவபுரம் கிராமத்தில் நிரூபனமாகியுள்ள நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் விழிப்புக் குழுக்களை வலுப்படுத்தி பொலிஸாருடன் இணைந்து செயற்படுத்துவதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா | Minister Douglas About Human Remains Tamil Areas

கிளிநொச்சி - சிவபுரம் கிராமத்தில் கடந்த காலங்களில் சமூக விரோதச் செயல்கள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்திருந்தது. இந்நிலையில் குறித்த கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து விழிப்புக் குழுவினை உருவாக்கி கிராமத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் குறித்த கிராமத்தில் சமூக விரோதச் செயற்பாடுகள் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடையடைப்பு கோரிக்கை நிராகரிப்பு

இந்நிலையில், வடக்கு, கிழக்கில் மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் கடையடைப்பு கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் கூட்டத்தில் கலந்து கொண்ட அரச அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா | Minister Douglas About Human Remains Tamil Areas

கொக்குளாய் கொக்குத் தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடாக இருக்கின்ற போதிலும், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்படும் வகையிலான செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மனித எச்சங்கள் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், விஞ்ஞான ஆய்வுகளின் ஊடாக அவை எந்தக் காலப் பகுதிக்குரியவை என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US