மாதம் 100 மில்லியன் டொலர்களை கோரும் அமைச்சர்
நாட்டுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய தனது அமைச்சுக்கு ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, (Bandula Gunawardana) அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அரிசி, சீனி, மிளகாய், கிழங்கு, வெங்காயம், பருப்பு போன்ற அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்த பணம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் அரச திறைசேரியில் போதுமான டொலர்கள் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், அரசாங்கம் நட்பு நாடுகளிடம் டொலர்களை கடனாக பெற தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளிலும் கடனை பெறுவது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அத்துடன் இந்தியாவுக்கு இலங்கைக்கு ஆயிரத்து 400 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam