இலங்கையின் கடல் வளம் காக்கப்படும்!- அமைச்சர் சந்திரசேகர்

Colombo Lotus Root Sri Lanka Fisherman
By Rakesh Nov 22, 2025 07:58 AM GMT
Report

"இலங்கையில் கடல் வளம் மற்றும் நீரியல் வளங்களைப் பாதுகாப்பதற்குரிய அத்தனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும். இந்தத் துறையில் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வேண்டும் இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மீனவர் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு அக்வா பிளான்ட் இலங்கை – 2025 சர்வதேச மீன்வளக் கண்காட்சி நேற்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கண்காட்சியையும் ஆரம்பித்து வைத்தார்.

வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு: போலி விளம்பரம் குறித்து எச்சரிக்கை

வெளிநாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை வாய்ப்பு: போலி விளம்பரம் குறித்து எச்சரிக்கை

இலங்கையின் கடல் வளம் காக்கப்படும்!- அமைச்சர் சந்திரசேகர் | Minister Chandrasekhar Statement Announcement

அலங்கார மீன்களின் அதிசயங்கள்

இன்று முதல் நாளை மறுதினம் வரை நடைபெறும் குறித்த சர்வதேச கண்காட்சியில் அலங்கார மீன்களின் அதிசயங்கள், கடல்வாழ் உயிரினங்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் பரந்த அளவிலான கடல்சார் பயன்பாடுகள் என்பன காட்சிப்படுத்தப்படும். இதற்குக் கட்டணம் எதுவும் அறிவிடப்படமாட்டாது.

எனவே, மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்கேற்று பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வின் பின்னர், உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரையும் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு, மீனவர்களுக்குரிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

அத்துடன், கடற்றொழிலில் இதுவரை குற்றம் இழைக்காத மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர் பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், தெற்காசிய நாடுகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் இந்தியா, மாலைதீவு, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இன்று ஆரம்பமான இந்தக் கண்காட்சி 3 நாட்களுக்குத் தொடர்ந்து இடம்பெறுகின்றது. இதனைப் பார்வையிட வருமாறு மாணவர்கள் உட்பட அனைவரையும் அழைக்கின்றேன்.

இலங்கையின் கடல் வளம் காக்கப்படும்!- அமைச்சர் சந்திரசேகர் | Minister Chandrasekhar Statement Announcement

மாநாட்டின் முதன்மை நோக்கம்

இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் மிகப் பெரிய கண்காட்சி இதுவாகும் என இதில் பங்கேற்றுள்ள ஒருவர் குறிப்பிட்டார். இதனை எமது நாட்டில் நடத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பு பெருமையளிக்கின்றது.

இதன்மூலம் உலகின் கவனத்தையும் ஈர்க்கலாம். எமது அமைச்சின் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு காரணமாகவே இவ்வளவு பெரிய கண்காட்சியை எம்மால் சிறப்பாக நடந்த முடிந்துள்ளது.

அமைச்சின் பிரதி அமைச்சர் மற்றும் செயலாளர், பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகள்.

எமது நாட்டு கடல் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதே மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். இது விடயத்தில் ஜனாதிபதியின், ஏனைய அமைச்சர்களின் அரசின் முழு ஆதரவும் எமக்கு இருக்கின்றது.

அதேவேளை, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மூலம் எமது நாட்டு கடல் வளத்தை நாசமாக்கும் நடவடிக்கையில் சிறு மீனவக் குழுவொன்று ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் கடற்படையினர் முன்னர் போல் அல்ல. அவர்கள் தற்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர்." - என்றார்.

2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் அழகாக மாற முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் அழகாக மாற முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US