ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதனை தடுக்கும் அமைச்சர்
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதனை அமைச்சர் ஒருவர் தடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென பௌத்த பீடங்களின் மாநாயக்க தேரர்கள் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.
எனினும், இந்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதற்கு முக்கிய அமைச்சர் ஒருவர் தடையை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள கோரிக்கை
இந்த விவகாரம் தொடர்பில் குறித்த அமைச்சர் அசமந்தப் போக்கினை பின்பற்றி வருவதாகவும், நடவடிக்கை எடுப்பதினை காலம் தாழ்த்துவதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இனங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படும் வகையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தி கடந்த மார்ச் மாதம் ஞானசார தேரருக்கு நீதிமன்றம் நான்கு ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு மூன்று பீடங்களினதும் மாநாயக்க தேரர்கள், கடந்த மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri