திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பந்துல குணவர்தன
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்திற்கு நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(12.07.2024) இடம்பெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
இதன்போது, வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலைக்கு சென்று அங்கு நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலில், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள, அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan