நெடுஞ்சாலைகளில் வெளியேறும் வாயில்களில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசல்!

Colombo Johnston Fernando Meeting Electronics
By Independent Writer Oct 17, 2021 01:33 PM GMT
Report

அதிவேக நெடுஞ்சாலைகளில் அலுவலக நேரங்களில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் காணப்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக புதிய மின்னணு கட்டண அறவீட்டு கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ(Johnston Fernando) தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை செயல்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் உள்ள கட்டண கூடங்களில் கைகளினால் பணம் செலுத்தி சீட்டு பெறும் போது காசாளர் சீட்டை ஒப்படைக்க சுமார் 12-15 வினாடிகள் செல்கிறது.

இலத்திரனியல் கட்டண முறையைப் பயன்படுத்தும் போது 6 வினாடிகளில் அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வாகனங்களுக்கு வெளியேற முடியும். எனவே நெடுஞ்சாலை பயனாளர்கள் முற்கொடுப்பனவு அட்டை முறையைப் பயன்படுத்துமாறு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த அட்டையை அறிமுகப்படுத்துவதன் மூலம் நெடுஞ்சாலைகளின் வெளியேறும் வாயில்களில் ஏற்படும் அதிக போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மாத்திரம் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள இந்த மின்னணு கட்டண அறவீட்டு நிலையங்களை கெரவலப்பிட்டி உள்ளக பரிமாற்ற நிலையம் மற்றும் ஏனைய நெடுஞ்சாலைகள் என்பவற்றிலும் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது பல கட்டண கூடங்கள் மூடப்பட்டிருப்பதைக் கவனித்த அமைச்சர், இதற்கு என்ன காரணம் என அதிகாரிகளிடம் வினவியுள்ளார்.

தற்போது நெடுஞ்சாலைகளில் உள்ள பணம் அறவிடும் கூடங்களில் பணியாற்ற காசாளர் பற்றாக்குறை இருப்பதாக நடவடிக்கை பணிப்பாளர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை திட்டங்களில் காசாளர்களாக நியமனம் பெற்று தேவைகளுக்கு அமைவாகப் பிரதேச அலுவலகங்களில் முகாமைத்துவ உதவியாளர்களாக பணிபுரியும் ஊழியர்களை நெடுஞ்சாலை செயல்பாட்டு முகாமைத்துவப் பிரிவுக்கு உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

குறித்த கூடடத்தில் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன், அதிவேக நெடுஞ்சாலை செயற்பாட்டு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.  

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US