மில்டன் கீன்ஸ் முத்தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா-2026
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மில்டன் கீன்ஸ் முத்தமிழ் மன்றம் (MKMM), மில்டன் கீன்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் இந்தியத் தமிழர்களால், தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற சமூக அமைப்பாகும்.
தமிழ்மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உயரிய நோக்குடன், இன்று 400ற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களை ஒருங்கிணைக்கும் வலுவான சமூகமாக MKMM வளர்ந்துள்ளது.
முக்கிய விழா
2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட MKMM தமிழ் பள்ளி, ஆண்டுதோறும் 200ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளி, 5 வயது முதல் 9 கல்வியாண்டுகள் வரை, மாணவர்கள் தமிழை வாசிக்கவும், எழுதவும், சரளமாக பேசவும் திறன் பெறச் செய்கிறது.
MKMM-இன் முக்கிய விழாக்களில் ஒன்றான பொங்கல் திருவிழா, ஆண்டுதோறும் முழுமையாக நிரம்பும் (Sold Out) நிகழ்வாக600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.
நடனம், இசை, நகைச்சுவை, பட்டிமன்றம், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய தமிழ்நாட்டு உணவுகள் இந்த விழாவின் சிறப்பு.
பொங்கல் விழா
இதற்கு மேலாக, கோடை விளையாட்டு விழா, இலையுதிர் கால விழா (நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ்) மற்றும் ஆண்டு முழுவதும் இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், சமூக சேவை, இரத்த தான முகாம், யோகா, கைட் பறக்கவிடும் நாள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆர்வமிக்க, திறமையான தன்னார்வலர்களால் இயக்கப்படும் MKMM, மில்டன் கீன்ஸ் நகரில் வளரும் இளம் தமிழ் குடும்பங்களை ஒன்றிணைத்து, கலாச்சாரம், சமூக சேவை மற்றும் சந்தோஷத்தை கொண்டாடும் ஒரு மேடையாக திகழ்கிறது.
MKMM – தமிழின் மணத்தை மண்ணிலிருந்து மனம் வரை பரப்பும் ஒரு சமூக இயக்கம். இந்த ஆண்டு நாம் கொண்டாடும், Lankasri,Tamilwin, IBC Tamil பிரதான ஊடக அனுசரணையுடன் MKMM அறுவடைத் திருநாள் Pongal 2026 இந்த பொங்கல், இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய, வண்ணமயமான, கலாச்சார கொண்டாட்டமாக இருக்க தயாராகிறது.
காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை — முழு நாள் மகிழ்ச்சி! உற்சாகம் தரும் நடன & இசை நிகழ்ச்சிகள், சிரிக்க வைக்கும் நாடகங்கள்குடும்ப ரேம்ப் வாக் கோலம் / ரங்கோலி போட்டி குழந்தைகளுக்கான போஸ்டர் வரைதல் வாழை இலை சைவ & அசைவ மதிய / இரவு உணவு முழு நாள் சமூக ஒற்றுமை, நல்ல எண்ணங்கள் & பொங்கல் ஆனந்தம் வாங்க… எல்லோரும் சேர்ந்து பொங்கலை பாரம்பரியமாகவும், பெருமையாகவும் கொண்டாடுவோம்.
தமிழை வளர்ப்போம்… தலைமுறைகளை இணைப்போம்…