கனடா நிராகரித்த விசாக்கள்: புலம்பெயர காத்திருப்போருக்கு எச்சரிக்கை
கடந்த ஆண்டில் 2.35 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளது.
கோவிட் பரவலுக்கு பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட 2.35 மில்லியன் விசாக்களில் 1.95 மில்லியன் விசாக்கள் பயண விசாக்கள் ஆகும்.
நிபுணர்களின் எச்சரிக்கை
அத்துடன், ஆய்வு அனுமதி மற்றும் பணி அனுமதி விசாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
புதிதாக கனடாவிற்கு புலப்பெயர்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா தனது குடிவரவு விதிகளை கடுமையாக்குகிறது என்பதை இது காட்டுகிறது.
வளங்களை சிறப்பாக நிர்வகிப்பதற்காகவே கனேடிய அரசாங்கம் இந்த மாற்றங்களைச் செய்து வருகிறது.
இதேவேளை, இந்த மாற்றங்கள் வீட்டுவசதி மற்றும் சுகாதாரத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் அதேவேளையில், பல்வேறு தொழில்களில் தொழிலாளர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
