நாளை முதல் நடைமுறைக்கு வரும் விலை குறைப்புக்கள்
ஒரு கோப்பை பால் தேநீரின் விலை நாளை முதல் குறைக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 90 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பால் மாவின் விலை குறைகிறது
பால் மாவின் விலை குறைவடைந்துள்ளதை பயன்படுத்தி மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, 100 ரூபாவாக இருந்த ஒரு கப் பால் தேநீர், 10 ரூபா குறைத்து நாளை முதல் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவாலும், 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் அண்மையில் தெரிவித்தனர்.