பால் மா விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் சந்தையில் நுகர்வோர், புதிய விலை திருத்தங்களுக்கு அமைய பால்மாவை கொள்வனவு செய்ய முடியும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய நேற்று (13.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
உற்பத்திகள் இடம்பெறுவதில்லை
மேலும் கூறுகையில்,“கடந்த 8ஆம் திகதி நாட்டை வந்தடையவிருந்த, பால்மா அடங்கிய கப்பல்கள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தாமதமடைந்துள்ளன.
இதன் காரணமாக தற்போதைய நாட்களில் உற்பத்திகள் இடம்பெறுவதில்லை.
எனவே, புதிய பால்மா தொகை நாட்டை வந்தடைந்ததன் பின்னர், அவற்றை நாடளாவிய ரீதியில் புதிய விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |