உலக பால் மா நுகர்வு வரிசையில் இலங்கை முன்னணி!
உலகில் அதிக அளவில் பால்மாவை நுகரும் நாடுகளின் வரிசையில் இலங்கை இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயத்தை கால்நடைவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
உலகில் அதிக அளவில் பால்மாவை நுகரும் ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தி
திரவ பாலின் நுகர்வுடன் ஒப்பிடும்போது பால்மா நுகர்வானது ஆரோக்கியத்திற்கும் போசாக்கிற்குக்கும் பொருத்தமானது அல்ல. திரவ பால் நுகர்வினை பிரச்சாரம் செய்வது சவால் மிக்கது.
இலங்கையில் 337 கால்நடை வள காரியாலயங்கள் காணப்படுவதாகவும் அவற்றைக் கொண்டு திரவ பால் நுகர்வினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தேவையான பாலின் 40 வீதமான அளவே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஏனைய பால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
