முல்லைத்தீவு காட்டு பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தில் இராணுவத்தினருக்கு வரவேற்பு (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தினால் அழிவடைந்த நிலையில் இருந்த ஆதிசிவலிங்க விநாயகர் (காட்டு பிள்ளையார்) ஆலயத்தின் கும்பாபிஷேகமானது சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள சிவலிங்க விநாயகர் (காட்டு பிள்ளையார்) ஆலயமானது ஆலய பரிபாலனசபையினர் மற்றும் இராணுவத்தினரின்
ஒத்துழைப்புடன் கட்டி முடிக்கப்பட்டு விஞ்ஞாபன நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன நேற்றையதினம் (03.09.2023) ஆரம்பமாகியிருந்தன.
விஞ்ஞாபன நிகழ்வு
குறித்த விஞ்ஞாபன நிகழ்வானது நேற்றிரவு கிரியைகளை தொடர்ந்து இரவு 10 மணி தொடக்கம் இன்று (04.09.2023) காலை 10 மணிவரை எண்ணெய்க்காப்பு வைபவம் இடம்பெற்று, பிரதம குருக்களான கௌரி சங்கரசர்மா (வவுனியா) தலைமையில் கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கும்பாபிஷேகத்தில் 68 வது படை பிரிவின் இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜென்றல் கஸ்தூரி முதலிகே, 682 பிரிக்கேட் கொமாண்டர் கேணல் ரொஹான், 3 ஆவது காலாட்படை படைப்பிரிவின் அதிகாரி ஆர்.எம்.ஆர். ரணவீர மற்றும் இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர் கிராம மக்கள், பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.












10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
