அமெரிக்காவின் கடற்படையை கதி கலங்க வைத்த இராணுவத்தின் பகிரங்க எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால், செங்கடல் பகுதியை முழுவதுமாக முடக்குவோம் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
இதனால், கடந்த ஏப்ரல் 3 அன்று முதல் ஈரானின் துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகிறது.
இந்த நிலையில், ஈரானின் வர்த்தகம் மற்றும் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்க கடற்படை முடக்குவது, போர்நிறுத்தத்தை மீறியதாகக் கருதப்படும் என ஈரான் இராணுவம் அறிவித்தது.
இந்த முற்றுகைகள் தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் எவ்வித ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை இஸ்லாமியக் குடியரசின் வலிமைமிக்க ஆயுதப் படைகள் அனுமதிக்காது என ஈரான் ,ராணுவத்தின் மூத்த அதிகாரி அலி அப்துல்லாஹி கூறியுள்ளார்.
இதுதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி......
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri