இராணுவத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்படும்! இலங்கையில் இராணுவ ஆட்சி தொடர்பில் கமல் குணரட்னவின் தகவல்
நாட்டில் பயங்கரமான நிலைமை ஏற்பட்டால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராணுவத்திற்கு அதிகாரங்களை வழங்குவார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்,
இராணுவ ஆட்சி ஏற்படும் என்று பரவி வரும் கதைகள் உண்மைக்கு புறம்பானவை. இலங்கையில் எப்போதும் இராணுவ ஆட்சி ஏற்பட்டதில்லை. ஒரே ஒரு முறை 1960 அல்லது 1970 ஆம் ஆண்டுகளில் சிறிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த காலத்தில் நடந்த சம்பவம், முதலாவது, இரண்டாவது, மூன்றாவது பிரதானிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி திட்டமிட்டனர். இவர்களில் இரண்டாவது அல்லது மூன்றாவது நபர் சென்று, இவர்கள் இராணுவப் புரட்சியை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர் என காட்டிக்கொடுத்துள்ளார்.
இலங்கையில் இராணுவப் புரட்சி போன்ற ஒன்றை செய்வது மிகவும் கடினம். அச்சப்பட வேண்டாம், இலங்கையில் எப்போதும் இராணுவ ஆட்சி ஏற்படாது. இதனை பொறுப்புடன் கூறுகிறேன். நாட்டின் இராணுவத்தினருக்கு மத்தியில் அப்படியான எண்ணம் கூட இல்லை.
இராணுவ அதிகாரிகள் எவருக்கும் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்ற வியாதி இல்லை. இதனால், இராணுவ ஆட்சியை ஏற்படுத்த போகின்றனர், இராணுவமயமாக்க போகின்றனர் என்ற கதைகள் பொய்யான வார்த்தைகள்.
எனக்கு பாதுகாப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நான் எனக்கு இந்த பதவியை வழங்குமாறு கேட்கவில்லை. என்னை பொறுப்பேற்குமாறு கூறினார்கள், நான் பொறுப்பேற்றேன். இதன் பின்னர், அதோ இராணுவமயமாக்கப்படுகின்றது என பலர் கூற ஆரம்பித்தனர்.
நான் 35 ஆண்டுகளும் 5 நாட்களும் சீருடை அணிந்து இராணுவத்தில் கடமையாற்றி, பல துன்பங்களை அனுபவித்து, இந்த நாட்டுக்கு சிறிதளவேனும் சேவையை செய்தவன். நான் அப்படி செய்த சேவை எப்படி எனது நாட்டுக்காகவும் எனது மக்களுக்காக மேலும் சில பணிகளை செய்ய முடியும் என்றால், அது எப்படி தகுதியற்றதாக இருக்கும்.
என்னை பணியாற்ற வருமாறு அழைத்தால், அது எப்படி தகுதியற்றதாக இருக்கும். இதனால், இராணுவ ஆட்சி ஏற்படும் என்பது முற்றிலும் பொய்யான கதை.
ஆனால், நாட்டில் பயங்கரமான நிலைமை ஏற்பட்டால், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராணுவத்திற்கு அதிகாரங்களை வழங்குவார்கள்.
அதன் பின்னர், நாட்டில் இயல்பு நிலைமை ஏற்பட்ட பின்னர், அவசர காலச் சட்டத்தை நீக்குங்கள், ஊரடங்குச் சட்டமும் தேவையில்லை என நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுவோம். இதனால், எவரும் இராணுவ ஆட்சி ஏற்படும் என்று கற்பனை செய்துக் கூட பார்க்க வேண்டாம்.
எங்களில் எவருக்கும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையோ அப்படியான தேவையோ இல்லை. நாங்கள் தற்போது இருக்கும் நிலைமையில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
