ஆளில்லா கமராக்களால் புலம்பெயரும் பறவைகள் ஆபத்தில்

Srilanka Birds Mannar
By Dhayani Feb 03, 2022 05:10 PM GMT
Report

மன்னாரில் உள்ள அதிக உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் வலயத்தை கண்காணிப்பதற்காக கொழும்பில் இருந்து வரும் விசேட சலுகைகளைப் பெற்ற சிறு குழுக்கள், பறவைகளை ஆய்வு செய்ய ஆளில்லா கமராக்களை பயன்படுத்துவதால் அழகிய பறவை இனங்கள் இலங்கைக்கு மீண்டும் திரும்பாத அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் குழு எச்சரித்துள்ளது.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து பறவை கண்காணிப்பாளர்கள் என அழைக்கப்படுபவர்கள் மன்னாருக்கு ஆளில்லா கமராக்களை கொண்டு வருவதை அறிந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

தனித்துவமான, அரிய மற்றும் பறவை இனங்கள் மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து தங்கியிருப்பதும் அவற்றின் எதிர்கால வருகையும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு புலம்பெயர் பறவைகள் உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்காக மன்னார் சரணாலயத்திற்கு ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து வருவதோடு இவற்றில் பிளமிங்கோக்கள் மிக முக்கியமானவை என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல பறவை இனங்கள் இப்பகுதிக்கு வருகைத் தருவதோடு, ஒவ்வொரு வருடமும் புதிய இனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இப்பகுதி உயர் பாதுகாப்பு வலையமாக கருதப்படுவதோடு, ரேடாரில் சிக்காமல் இருக்க ஆளில்லா கமராக்களை கீழே பறக்க விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை தாம் அறிந்து கொண்டுள்ளதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் கூறியுள்ளது.

ஆளில்லா கமராக்கள் உணவும் தேடும் பறவைகளுக்கு அதிக தொல்லை தருவதாக வலியுறுத்தியுள்ள அந்த சங்கம், ஆளில்லா கமராக்கள் எழுப்பும் அதிக சத்தத்தாலும், உணவுத் தேடும் பறவைகளை ஒத்த அவற்றின் வடிவத்தாலும், அவை பறவை இனங்களுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளது என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலைமையால், பறவை இனங்கள் நாட்டை விட்டு வெளியேறினால், அவை மீளத்திரும்பாது எனவும், கொழும்பில் உள்ள சிலருக்கு சலுகைகளை அனுமதித்தமைக்காக முழு நாடும் விலை கொடுக்க நேரிடலாம் எனவும் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த அழிவுகரமான செயன்முறையை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் நல்ல மனம் படைத்த ஆளில்லா கமராக்களை இயக்குபவர்களையும் கேட்டுக்கொள்வதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

புலம்பெயர் பறவைகள் மனித செயல்பாடுகள் காரணமாக எப்படி தங்கள் முந்தைய வாழ்விடத்தை விட்டு வெளியேறின என்பதை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் நினைவுபடுத்தியுள்ளது.

லுணுகம்வெஹெரவில் இருந்து பூந்தல தேசிய பூங்காவிற்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டதன் மூலம், பூங்காவில் உள்ள மிகவும் பிரபலமான பறவைக் கூட்டங்கள் நீர் குறைப்பு அல்லது நீர்த்துப்போதல் காரணமாக வடக்கே இடம்பெயர்ந்ததாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயத்தை மறந்துவிடக் கூடாது எனவும், பறவைகள், வடக்கே நகரும், பின்னர் நாட்டை விட்டு வெளியேறும் என வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் எச்சரித்துள்ளது. 

மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US