பணம் அனுப்புவதை குறைத்த புலம்பெயர் தொழிலாளர்கள்! - 13 ஆண்டுகளின் பின் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த 13 ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து மிகக் குறைந்த பணம் அனுப்பும் மதிப்பு 2022ம் ஆண்டு ஜனவரி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, ஜனவரி 2022 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 259.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஜனவரி மாதம் பெறப்பட்ட 645.3 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இது 61.6 வீதம் குறைவாகும். 2021 டிசம்பரில் வெளிநாட்டுப் பணியாளர்கள் அனுப்பிய பணம் 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2020 டிசம்பரில் 813 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது வெளிநாட்டுப் பணம் அனுப்பிய பற்றுச்சீட்டுடன் ஒப்பிடும்போது 60 வீதம் குறைவாகும்.
ஒட்டுமொத்த அடிப்படையில், 2020ல் 7,104 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் 22.7 வீதம் குறைந்து 2021ல் 5,491 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் 240 ரூபாவை செலுத்துமாறு கோரியுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா கடந்த 08ம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.