மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிர போர் - எரிபொருட்களின் விலைகளில் திடீர் மாற்றம்
உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (29.03.2026) கணிசமான அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய எரிசக்தி சந்தையின் தற்போதைய தரவுகளின்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 99.64 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
விலை அதிகரிப்பு
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 112.6 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் மாற்றம் ஏற்பட்டு அதன் விலை 3.025 அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது.

பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்தால், வரும் நாட்களில் எரிசக்தி விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என சந்தை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பெரும் தாக்கம்
மேலும், மத்திய கிழக்கு பிராந்திய தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த திடீர் விலை அதிகரிப்பு உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam