மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் : உயர்வடையும் கச்சா எண்ணெய் விலை
ஆசியாவில் இன்று(31.03.2026) காலை வர்த்தகத்தில் உலகளாவிய எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 3வீதம் உயர்ந்து, கிட்டத்தட்ட 106 டொலராக (80.52 பவுண்ட்) அதிகரித்துள்ளது.
விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால்
பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, திங்கட்கிழமை வர்த்தக அமர்வின் முடிவில் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டொலருக்கும் அதிகமாக இருந்தது.

மேலும், இது ஜூலை 2022இற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அமெரிக்க கச்சா எண்ணெய் விலையாகும்.
உலகளாவிய எண்ணெய் விலை அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய், செவ்வாயன்று 2வீதத்திற்கும் மேல் உயர்ந்ததைத் தொடர்ந்து, 115 டொலராக அதிகரித்தது.
விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
14 ஆண்டு சோகத்திற்கு முடிவு - எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த மும்பை இந்தியன்ஸ் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam