மத்திய கிழக்கு நாடுகளில் போர் நிலைமை - இலங்கையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு
இலங்கை சந்தையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் நீங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக லாப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், லாப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிவாயு கையிருப்பு
எவ்வாறாயினும், லாப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் வந்த கப்பல் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகிக்கப்படும் என லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு நான்காவது இடம்: அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் News Lankasri

100 நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா! முன்னிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்மீனியா News Lankasri
