மத்திய கிழக்கு அமைதி முயற்சி: அமெரிக்கா, ஈரான் குழுக்களுக்கு கத்தார் பிரதமர் பாராட்டு
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுக்கள் மேற்கொண்டு வரும் தீவிர முயற்சிகளுக்கு கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அமைதிப் பேச்சுவார்த்தை
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தையானது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு மட்டுமின்றி, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை அங்கிருந்த தலைவர்கள் அனைவரும் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அனைவரையும் இந்த பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்த இரு நாட்டுத் தலைவர்களின் தலைமைப் பண்பிற்கும், அவர்களின் உறுதியான முடிவிற்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட கத்தார் பிரதமர், இது இன்னும் முழுமையான கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல என்றும், அமைதிக்கான ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும் கூறினார்.
மேலும், இப்பிராந்தியத்தில் ஒரு நிரந்தரமான தீர்வு எட்டப்படும் வரை, இந்த சமாதான பேச்சுவார்த்தைக்கான முழு ஆதரவையும் கூட்டாண்மையையும் கத்தார் அரசு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வழங்கும் என்றும் அவர் தனது உரையில் உறுதியளித்துள்ளார்.