மத்தியகிழக்கு கிரவுண் தொடர் 5 தொடர்பில் கொழும்பில் ஊடக சந்திப்பு (Video)
சர்வதேச தொழில்முறை குத்துச் சண்டை போட்டியான மத்தியகிழக்கு கிரவுண் தொடர் 5 தொடர்பான ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த ஊடக சந்திப்பு கொழும்பிலுள்ள நட்சத்திர விருந்தகமொன்றில் இன்றைய தினம் (31.10.2022) இடம்பெற்றிருந்தது.
சர்வதேச தொழில்முறை குத்துச் சண்டை போட்டியான மத்தியகிழக்கு கிரவுண் தொடர் 5 கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி பிற்பகல் 3 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.
இலங்கையில் மிக பிரம்மாண்டமான அளவில் இடம்பெறவுள்ள முதலாவது சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டை நிகழ்வு இதுவாகும்.
நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இலங்கை சிறந்த இடம் என்பதை அது நிரூபிக்கும். இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போதைய நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறையை குறிப்பாக விளையாட்டுத்துறை சுற்றுலாத்துறையை ஊக்குவித்து மேம்படுத்தவும் இலங்கையில் சர்வதேச தொழில்முறை குத்துச்சண்டையை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்லவும் இந்த நிகழ்ச்சி இலங்கைக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



