மும்பை - ஹைதரபாத் பலப்பரீட்சை: அணியின் பெருமைக்காக களமிறங்கிய மும்பை
நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் (IPL) தொடரின் 55ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (Sunrisers Hyderabad) அணிகள் மோதிக் கொள்கின்றன.
குறித்த போட்டியானது, இன்றையதினம் (06.05.2024) மும்பை வான்கடே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
ஹர்டிக் கருத்து
மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ஹர்டிக் பாண்டியா (Hardik Pandya) இது தொடர்பாக தெரிவிக்கையில், போட்டியில் புதிய பந்தினை முதலில் வீசும் போது மைதானம் அதற்கு சாதகமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தொடரின் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இனி வாய்ப்பில்லை என தெரிந்தாலும், ரசிகர்களுக்காகவும் அணியின் பெருமைக்காகவும் உத்வேகத்துடன் செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் சன்ரைசர்ஸ் அணி 6 ஓவர்கள் முடிவில் 56 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை இழந்துள்ளது.
அதேவேளை, புள்ளிபட்டியலில் மும்பை அணி 10ஆவது இடத்திலும் சன்ரைசர்ஸ் அணி 4ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam