டெல்லியை வீழ்த்தி பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 63 ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் குவித்தது.
சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 43 பந்தில் 73 ஓட்டங்களும், நமன் தீர் 8 பந்தில் 24 ஓட்டங்களும், எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். திலக் வர்மா 27 ஓட்டங்களும், , ரிக்கெல்டன் 25 ஓட்டங்களும், வில் ஜேக்ஸ் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
டெல்லி அணி
அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ஓட்டங்கள் எடுக்க மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்மூலம் 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஓப் சுற்றுக்கும் முன்னேறியது.
டெல்லி அணி 6 ஆவது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
