கலாநிதி மேழிக் குமரனின் நூல் வெளியீட்டு விழா
எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபது அகவையையும் ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது நாளை (25.02.2024) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற உள்ளது.
சிறுகதைத் தொகுப்பு
வவுனியா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லை நடராஜா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
குறித்த விழாவில் எழுத்தாளர் மேழிக்குமரனின் கொள்ளிக்காசு சிறுகதைத் தொகுப்பு நூலும் ‘அல்சைமர்’ மருத்துவ நூலும் வெளியிடப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
