யாழ்ப்பாணத்திற்கும் ஆடம்பர மெட்ரோ பேருந்து சேவை! அமைச்சர் வெளியிட்ட தகவல்

Colombo Jaffna Srilanka Bus Ramalingam Chandrasekar
By Theepan Nov 11, 2026 06:34 AM GMT
Report

நாட்டின் நகர்ப்புற பொதுப்போக்குவரத்து சேவையை மேலும் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மாற்றும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மெட்ரோ நகர்ப்புற ஆடம்பரப் பேருந்துச் சேவையை (Urban Luxury Transport) யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் விரிவுபடுத்துவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண நகரில் மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்குப் பொருத்தமான பாதைகளை அடையாளம் காணுதல், தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆராய்தல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் விசேட வீதி ஆய்வும் பரீட்சார்த்த ஓட்டமும் நேற்று (10.11.2026) முன்னெடுக்கப்பட்டன.

பேருந்து சேவை

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதற்கு முன்னதாக, யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணத் திட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில், மெட்ரோ பேருந்துச் சேவையை யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆரம்பகட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

கொழும்பில் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மெட்ரோ பேருந்துச் சேவைக்கு மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் மத்தியில், சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் ஆடம்பர மெட்ரோ பேருந்து சேவை! அமைச்சர் வெளியிட்ட தகவல் | Metro Bus Service Jaffna Special Road Inspection

தனியார் வாகனங்களில் தமது பணியிடங்களுக்குச் சென்று வந்த பலர், தற்போது தமது வாகனங்களைப் பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள வாகனத் தரிப்பிடங்களில் நிறுத்திவிட்டு, மெட்ரோ பேருந்துகளைப் பயன்படுத்தும் புதிய போக்குவரத்துக் கலாசாரமொன்று கொழும்பில் உருவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகளாவிய ரீதியில் நகர்ப்புற போக்குவரத்து நெரிசல் பாரிய சவாலாக உள்ள நிலையில், தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, மக்களைப் பொதுப் போக்குவரத்துச் சேவையை நோக்கி ஈர்ப்பதில் இத்தகைய திட்டங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இச்சேவையை, 2029 ஆம் ஆண்டு வரையிலான தேசிய விரிவாக்கத் திட்டத்தின் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை வடக்கு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகை மற்றும் நகர்ப்புறப் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பல மாவட்டங்கள் காணப்படுகின்ற போதிலும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமைக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன ஆகியோருக்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்குத் தரமான பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கம். இச்சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, நாடு முழுவதற்குமான நவீன பொதுப் போக்குவரத்து வலையமைப்பாக மாற்றப்பட வேண்டும்.

அதேவேளை, சேவையின் தரம் மற்றும் செயற்பாட்டு அனுபவங்களின் அடிப்படையில் பயணக் கட்டணங்கள் உள்ளிட்ட விடயங்களை எதிர்காலத்தில் மீளாய்வு செய்து, பயணிகளுக்கு மேலதிக சலுகைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இச்சேவையைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் அனைத்தும் சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு, உரிய தொழில்நுட்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மெட்ரோ பேருந்துச் சேவையின் நாடளாவிய விரிவாக்கத்திற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேனவின் செயற்பாடுகளையும் அமைச்சர் பாராட்டியதுடன், இத்திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவரது ஒத்துழைப்பு முக்கியமானதாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான மெட்ரோ பேருந்துச் சேவையை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிப்பதை இலக்காகக் கொண்டு, தேவையான முன் ஆயத்தப் பணிகளைத் துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய வீதி ஆய்வின் போது, தாழ்தள (Low-floor) மெட்ரோ பேருந்துகளை இயக்குவதற்குப் பொருத்தமான வீதிகள் மற்றும் பாதைகளை அடையாளம் காணுதல், பேருந்துகளின் தொழில்நுட்பத் தேவைகளை மதிப்பீடு செய்தல், நகரை மையமாகக் கொண்டு புதிய பேருந்து நிறுத்தங்களை அமைத்தல் மற்றும் அவற்றுக்கு அருகில் தனியார் வாகனங்களை நிறுத்துவதற்கான வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்த விடயங்களில் போக்குவரத்து பிரதி அமைச்சரும் இலங்கை மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்தின் நிர்வாகத்தினரும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன,

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 10 பேருந்துகளுடன் முன்னோடி திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பேருந்து சேவை, தற்போது 122 பேருந்துகளுடன் மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஏழு வழித்தடங்களில் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பானதும் வசதியானதுமான பயண அனுபவத்தை வழங்குவதுடன், தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் மக்களைப் பொதுப் போக்குவரத்துச் சேவையை நோக்கி ஈர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் ஆடம்பர மெட்ரோ பேருந்து சேவை! அமைச்சர் வெளியிட்ட தகவல் | Metro Bus Service Jaffna Special Road Inspection

கொழும்பில் கிடைத்துள்ள அனுபவங்களின் அடிப்படையில், இத்திட்டத்தின் அடுத்த கட்ட விரிவாக்கத்திற்காக யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

2029 ஆம் ஆண்டு வரையிலான தேசியத் திட்டத்தின் கீழ், இலங்கை மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனத்தின் ஊடாக 100 சதவீத அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மெட்ரோ பேருந்து வழித்தட அனுமதிப்பத்திரங்களை முறைப்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழுவில் போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC), இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB), வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA), மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, இலங்கை மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படுவர்.

இந்நிகழ்வில் இலங்கை மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் பி.எம். பியதிலக்க, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.கே.சி. சமரக்கொடி, இலங்கை போக்குவரத்துச் சபையின் வட மாகாணப் பிராந்திய முகாமையாளர் ஏ.ஜே. லம்பேர்ட், வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் போக்குவரத்து அதிகாரி ஜே.என். ரவிச்சந்திரன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வட மாகாணப் பணிப்பாளர் டி.பி.எஸ்.கே. திஸாநாயக்க, யாழ் மாநகர சபை உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளருமான சுந்தரமூர்த்தி கபிலன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். 

நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

 

50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US