ஹரின் பெர்னாண்டோவின் பிரசாரத்தில் குழப்பத்துக்கு காரணமான மெஸ்ஸி
முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் (Harin Fernando) ஆதரவாளர்களின் அரசியல் பிரசாரத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்தபோது பதுளையில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரின் பெர்னாண்டோவும் அவரது ஆதரவாளர்களும் சர்வதேச கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் (Messi) ஜெர்சியை ஒத்த ‘10’ என்ற எண் கொண்ட டீ-சேர்ட்டுகளை அணிந்திருந்தனர்.
இதன்போது, தேர்தல் ஆணையக அதிகாரிகளுடன் இணைந்த பொலிஸார், இதனை மறைமுக பிரசார முயற்சியாக கருதி, குறித்த டீ சேர்ட்டுகளை அகற்றுமாறு முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஏமாற்றும் அரசியல் பிரசாரம்
அப்போது ஹரின் பெர்னாண்டோ மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த டீ-சேர்ட்டுகள் தேர்தல் பிரசாரத்துடன் தொடர்புபடவில்லை என்று அவர்கள் வாதிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இது முன்னாள் அமைச்சரின் தேர்தல் வேட்புமனுவை அடையாளப்படுத்துவதாகவும், ஏமாற்றும் அரசியல் பிரசாரம் எனவும் பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணையக அதிகாரிகள் வாதிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |