வலுவடையும் போர் நிலைமை! சேத விபரம் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி விசேட அறிவிப்பு (Video)
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் வலுவடைந்து வரும் நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலஸ்ங்கி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இதுவரை நடந்த சண்டையில் பொதுமக்கள் உட்பட 137 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி இதன்போது தெரிவித்தார்.
மேலும் 316 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். தாம், தற்போது ரஷ்யாவின் முதல் இலக்காக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க குடியிருப்பில் இருக்கும் தமக்கு கியேவை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு (உள்ளூர்) கிய்வ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றிய தகவல்களை அவர் உறுதிப்படுத்தினார், இந்த தாக்குதல்கள் இராணுவ மற்றும் பொதுமக்கள் பகுதிகளில் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதை காட்டிலும் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் மேற்கத்திய நாடுகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தார் ரஷ்யாவின் தாக்குதல்கள் முடியும் வரை உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்வதை நிறுத்தாது என்று ஜெலென்ஸ்கி, ரஸ்ய தரப்புக்கு தெரிவித்துள்ளார்