நிதியமைச்சர் பசிலுக்கு டெல்லியிலிருந்து வந்த செய்தி
புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பஷில் ராஜபக்ஷவிற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து கடிதத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நேரில் சந்தித்து கையளித்துள்ளார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னர் உலகளாவிய பொருளாதார மீட்சி என்ற பின்னணியில் பொருளாதாரத்துறையில் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.
நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் சந்திக்கும் வெளிநாட்டு இராஜதந்திரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பூகோள பொருளாதாரத்தில் இருந்து மீள்வது குறித்து இலங்கை அதிக கவனம் செலுத்தியுள்ள நிலையில் பொருளாதார விடயங்களில் ஆசிய வலய நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நிதியமைச்சர் உள்ளார், அவ்வாறான நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை முக்கியமானதாகும்.
இச் சந்திப்பு இடம் பெற்ற இன்றைய தினம் வெளிநாட்டுத்தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் என முக்கிய 7 பேருடன் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
நிதி அமைச்சில் இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது, இலங்கைக்கான ஜேர்மன் தூதர், இலங்கைக்கான ரஷ்ய தூதர், இலங்கைக்கான சீன குடியரசின் தூதர், இலங்கைக்கான அமெரிக்க தூதர், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர், இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர், ஆகியோரை புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பஸில் சந்தித்துள்ளார்.








Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
