கிளிநொச்சியில் தென்னை மரத்தில் ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழப்பு
கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
முழங்காவில் கிருஷ்ணன் கோவில் வீதியில் குறித்த சம்பவம் இன்று (06-08-2023) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தவறி விழுந்து உயிரிழப்பு
சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, குறித்த நபர் தேங்காய் பறிக்கும் தொழிலை மேற்கொண்டு வரும் ஒரு கூலியான இவர் இன்றைய தினம் (06.08.2023) குறித்த பகுதியில் உள்ள ஒருவரின் காணியில் தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய சமயம் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அன்புபுரம் முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ரூபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam