உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் வெளியான மோசடி சம்பவம்: பரீட்சை நிலைய உதவியாளர் கைது
க.பொ.த உயர்தர 2023 விவசாய விஞ்ஞான i மற்றும் ii வினாத்தாள்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ மகா வித்தியாலய பரீட்சை நிலைய பொறுப்பாளரின் உதவியாளரே இன்று (15.1.2024) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
சம்பவம் தொடர்பில் அம்பாறையில் உள்ள பிரபல அரச பாடசாலையின் உயர்தர விவசாய விஞ்ஞான ஆசிரியரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.
52 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்தி வந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான I மற்றும் II வினாத்தாள்களை தனது வீட்டில் வைத்து அவரது சொந்தக் கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 30 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
