போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்காக கொழும்பில் நல்லிணக்க தூபி! ஜனாதிபதியின் நிலைப்பாடு

Sri Lankan Tamils Douglas Devananda Sri Lanka Final War Sri Lankan political crisis
By Kajinthan May 27, 2023 09:07 PM GMT
Report

''போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்காக கொழும்பில் நல்லிணக்க தூபி ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக'' கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்காக கொழும்பில் நல்லிணக்க தூபி! ஜனாதிபதியின் நிலைப்பாடு | Memorialisation And Reconciliation In Sri Lanka

போரில் உயிரிழந்தவர்களை ஒன்றாக நினைவு கூர நினைவு தூபி

‘‘1983 -2008 உள்நாட்டு இறுதி யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் பலர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களை ஒன்றாக நினைவு கூருவதற்கு ஒரு நினைவு தூபி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவையில் முன் வைத்தேன்.

எனது கோரிக்கையை ஜனாதிபதி சாதகமாக பரிசீலித்த நிலையில் கொழும்பில் நினைவு தூபியை அமைப்பதற்கான இடத்தினை அடையாளப்படுத்துவதற்காக குழு ஒன்றை அமைப்பதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சாதகமான பதிலை இட்டு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனெனில் இன மத மொழி வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்.

போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்காக கொழும்பில் நல்லிணக்க தூபி! ஜனாதிபதியின் நிலைப்பாடு | Memorialisation And Reconciliation In Sri Lanka

இனப் பிரச்சினை தீர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் 

நான் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரித்ததற்கு ஒரே ஒரு காரணம் நாட்டில் உள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அதை அவர் நிறைவேற்றினார்.

தற்போதய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற போது அவருக்கு நான் வெளிப்படையாகவே எனது ஆதரவை தெரிவித்தேன்.

ஏனெனில் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகளில் இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய ஆளுமை அவரிடமே காணப்படுவதை உணர்ந்து எனது வெளிப்படையான ஆதரவை தெரிவித்தேன்.

அவர் ஜனாதிபதியாக உள்ள நிலையில் மக்கள் நினைவேந்தல்களை மேற்கொள்வதற்கு எந்த தடையும் மேற்கொள்ளப்படவில்லை.

போராட்டத்தின் போது இந்த நாட்டில் பல்வேறு இளைஞர் யுவதிகள் கட்சி சார்ந்து அரசியல் குழுக்கள் சார்ந்து செயற்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் அவர்களையே நினைவு கூறுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கு ஜனாதிபதி நல்லெண்ணத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்காலத்தில் அனைத்து இன மக்கள் சார்ந்து நினைவேந்தல்களை மேற்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும் என நம்புகிறேன்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்ப்பதற்கு தமிழ் கட்சிகள் இதயசுத்தியுடன் அவரின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும்‘‘ என அவர் மேலும் தெரிவித்தார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US