போர் வெற்றியை நினைவுகூர நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி! தேரர் வெளியிட்டுள்ள தகவல்
சந்தஹிரு சேய தாது கோபுரம் போர் வெற்றியை நினைவுகூரும் நினைவுத் தூபியாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
போர் வெற்றிகளை நினைவுகூர நினைவிடங்களை நிர்மாணிக்கக் கூடாது சந்தஹிரு சேய தாது கோபுரம் போர் வெற்றியை நினைவுகூரும் நினைவுத் தூபியாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இது ஆரம்பிக்கப்பட்ட போதே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
குறித்த நினைவிடங்களை நிர்மாணிப்பது தோல்வியடைந்த தமிழ்த் தரப்பினர் மத்தியில் ஆத்திரத்தை உருவாக்கும். போரில் வென்றவர்கள் திருப்தியும், பெருமையும் அடைவார்கள்.
ஆனால் தோல்வியடைந்தவர்களுக்கு துன்பமும், துயரமும் அதிகம் என்பதுடன் தோல்வியடைந்தவர்கள் ஆத்திரமடைவார்கள் என்றும் இதனை நிர்மாணித்ததால், சிங்கள பௌத்தர்கள் சிலரும், இராணுவத்தினர் சிலருமே மகிழ்ச்சியடைவர் எனவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.